Tamil Nadu Short News is the startup news site in Tamil Nadu. Tamil Nadu Short News Collects News from different Online Tamil News Channels, Tamil News Distribution Websites and deliver the news in one place. This Tamil News site helps the tamil audience to get different tamil news in a single site.
புதன், 23 ஜனவரி, 2019
Tamil Cinema Breaking News: Superstar Rajinikanth - AR Murugadoss Joins Police Officer Action Film
கொடி பறக்குது, மூன்றுமுகம், பாண்டியன் போன்ற படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது, மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்க உள்ள புதிய படம், ஒரு மாஸான போலீஸ் படமாக இருக்கும் என்று தெரிகிறது. இது அலெக்ஸ் பாண்டியன், மிஸ்டர் ரைட் போன்ற கேரக்டர் போன்று மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Tamil32
லேபிள்கள்:
Rajinikanth Next Police Officer Role,
Superstar Next Police Movie,
Superstar Rajinikanth,
Superstar Rajinikanth and AR Murugadoss
இருப்பிடம்:
Chennai, Tamil Nadu, India
பிரியங்கா காந்தி உ.பி., மாநில கிழக்கு பகுதி பொது செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்
காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா, உ.பி., மாநில கிழக்கு பகுதி பொது செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அவர் நேரடி அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். பிப்ரவரி முதல் வாரத்தில் பிரியங்கா பொறுப்பேற்று கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரியங்காவை தவிர அகில இந்திய பொது செயலாளராக வேணுகோபாலும், உத்தர பிரதேச மேற்கு மாநில பொது செயலாளராக ஜோதிர் ஆதித்யா சிந்தியாவும், அரியானாவுக்கான பொது செயலாளராக குலாம் நபி ஆசாத்தும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
Source: Tamil32
நடிகர் அஜித் குமார் பற்றிய சிறு தகவல்கள்
தல அஜீத்தின் விஸ்வாசம் திரைப்படம், கடந்த 10ம் தேதி வெளியாகி, இன்றைய எட்டாம் நாளில் தமிழ்நாட்டில் 125 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் செய்துள்ளது. இந்நிலையில், எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, திரையுலகில் முத்திரைபதித்து, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்களால், “அல்டிமேட் ஸ்டார்” என்றும் “தல” என்றும் அழைக்கப்படும் இவரை பற்றி அறியாத பல விஷயங்களை இங்கே காணலாம்.
நடிகராக மட்டுமின்றி ஒரு கார் பந்தய வீரராகவும் இருந்து வரும் அஜீத் குமார் அவர்கள், இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலத்தின் தலைநகரமான ஹைதராபாத்தில், பாலக்காடு தமிழ் ஐயரான சுப்ரமணியம் என்பவருக்கும், கொல்கத்தா சிந்தி சமூகத்ததை சேர்ந்த மோகினி என்பவருக்கும் இரண்டாவது மகனாக மே மாதம் 1 ஆம் தேதி, 1971 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது அண்ணனான அனூப் குமார் நியூயார்க்கில் பங்குத்தரகராகவும், அவரது தம்பியான அணில் குமார் சியாட்டலில் பணிபுரிகிறார்.
சென்னையில் உள்ள ஆயிரம் விளக்குப் பகுதியில் இருக்கும் ஆசான் மெமோரியல் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கிய அவர், தனது பள்ளிப்படிப்பைப் பாதியிலே கைவிட்டு ஒரு இரு சக்கர பைக் மெக்கானிக்காகப் பணியில் சேர்ந்தார்.
பைக் பந்தயம் தான் தனது தொழில் பாதை என்று தேர்ந்தெடுத்த அவர், அதில் கலந்து கொள்ளப் பணம் வேண்டுமென்பதால், அவ்வப்போது, சிறு சிறு பத்திரிக்கை விளம்பரங்கள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து வந்தார். ‘பந்தயமா? சினிமாவா?’ என்று வந்த போது, அவர் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தினால், சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
1991ல், தனது 20 வது வயதில், தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமான அஜீத் குமார் அவர்கள், அப்படத்தின் இயக்குனர் மரணமடைந்ததால், அதில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். பின்னர், ஓர் ஆண்டுகள் கழித்து, 1992ல் ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழில் இவரது முதல் படம், செல்வா இயக்கத்தில், வெளியான ‘அமராவதி’. 1995ல் வெளியான ‘ஆசை’ திரைப்படம் அவருக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. .
தனது இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த அவர், மும்பை, சென்னை, டெல்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களுள் ஒருவர் என்றும், ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகரென்ற பெருமையைப் பெற்றார்.
ஜெர்மனி, மலேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட அவர், 2003 ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார். அது மட்டுமல்லாமல், 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களில் கலந்துகொண்ட மூன்று இந்தியர்களுள் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1999 ஆம் ஆண்டில், சரணின் ‘அமர்க்களம்’ என்ற படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார். ஷாலினியும் இதற்கு ஒப்புக்கொண்டதால், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2000 ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர்.
பிப்ரவரி 06, 2010 அன்று நிகழ்ந்த கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் காரணங்களுக்காகத் திரைப்பட விழாக்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாகப் பகிரங்கமாகப் புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அஜித், தவிர்க்க முடியாத சில நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை.
தீனா படத்தில் உள்ளூர் ரவுடியாக நடித்ததை தொடர்ந்து, அவரை ரசிகர்கள் “தல” என்று அழைக்கத் தொடங்கினர்.
பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்துள்ள இவர் 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கும் வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார்.
பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றார்.
ஆரம்பம் திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. இதனால், 2015 நவம்பர் மாதத்தில் முழங்கால், மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
அஜித் குமார் திரைப்படங்கள் மட்டுமின்றி மியாமி குசன், நடிகை சிம்ரனுடன் இணைந்து “நெஸ்லே சன்ரைஸ்” ஆகிய வர்த்தக விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தற்போது விளம்பரங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார்.
நடிகர் அஜீத் நான்வெஜ் உணவுகளை நன்றாக சமைத்து மற்றவர்களுக்கு வழங்குவார் என்ற போதும், அவர் வெஜிடேரியனாகவே இருந்து வருகிறார். மெக்சிக்கன் உணவுகளை சமைப்பதில் நிபுணராக இருந்து வரும் இவர், அந்த உணவு வீடியோக்களை யூடிப்பில் போட்டுள்ளார். பெரும்பாலும், தனது தனிப்பட்ட உணவாக இவர், வேகவைத்த காய்கறிகளை சரியான நேரத்திற்கு சாப்பிடுவார்.
கார், பைக் ரேஸ்களில் உள்ள ஆர்வத்தை தாண்டி, அஜீத்துக்கு ஏரோ மாடலிங்கிலும் ஆர்வம் உண்டு. விமானம் ஓட்டும் உரிமம் வைத்துள்ள அஜித், ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதில் கைத்தேர்ந்தவர். இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்களுக்கு ஆளில்லா விமானத்தை உருவாக்கும் ஆலோசகர் மற்றும் டெஸ்ட் பைலட்டாக அஜித் நியமிக்கப்பட்டார்.
இது உலகிலேயே அதிக நேரம் பறக்கக் கூடிய ஆளில்லா விமானம் என்ற உலக சாதனையை படைத்தது. இந்த பிரிவில் கல்லூரி அளவில் நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று அஜித்தின் தக்ஷா அணி முதல் இடத்தையும் தட்டிச் சென்றது என்பது கூடுதல் தகவல்.
Source: https://www.tamil32.com/cinema-news/thala-ajith-kumar-everything-you-need-to-know-about-this-indian-film-actor/
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)