புதன், 23 ஜனவரி, 2019

பிரியங்கா காந்தி உ.பி., மாநில கிழக்கு பகுதி பொது செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்

காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரி பிரியங்கா, உ.பி., மாநில கிழக்கு பகுதி பொது செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அவர் நேரடி அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். பிப்ரவரி முதல் வாரத்தில் பிரியங்கா பொறுப்பேற்று கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரியங்காவை தவிர அகில இந்திய பொது செயலாளராக வேணுகோபாலும், உத்தர பிரதேச மேற்கு மாநில பொது செயலாளராக ஜோதிர் ஆதித்யா சிந்தியாவும், அரியானாவுக்கான பொது செயலாளராக குலாம் நபி ஆசாத்தும் நியமிக்கப்பட்டு உள்ளனர். Source: Tamil32

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக